பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சொல் கோயில்கள் பெருந்தெய்வங்கட்கும் சிறு தேவதைகட்கும் உலகில் பல கல் கோயில்கள் உள்ளன. கம்பரின் பாலகாண்டத்தில் பெருந்தெய்வமாகிய சிவனுக்கு உள்ள சொல்கோயில்கள் சில வருமாறு : ஆற்றுப் படலம் நீறு அணிந்த கடவுள் = சிவன் (2). நகரப்படலம்- உமைக்கு ஒரு பாகத்து ஒருவன்-சிவன் (3) "யாவரும் தன்னை எய்துதற்கு அரிய தன்மையால்ஈசனை ஒக்கும். ஈசன்-சிவன் (8) திரு அவதாரப் படலம் தோகை பாகன்-சிவன் (7) (தோகை-உமாதேவி) கறை மிடற்று இறை-நீலக் கறை உள்ள கழுத்தை உடைய சிவன் (11) மதிவளர் சடை முடி மழுவலாளன்-பிறை நிலா பொருந்திய சடையையும் மழுப்படையையும் உடைய சிவன்- (14) சுடர் மதி சூடினோன்-சிவன் (22}