பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 199 பற்றி உள்ள பகுதிகளை எடுத்துக் காட்டுவதின் நோக்கங் கள் இரண்டு: முதலாவது :- வைணவப் பெரியார் ஒருவர், வைணவர் களைத் தவிர மற்றவர்கள் இராமாயணம் படிக்கலாகாது என்று சொன்ன கருத்து. கம்பருக்குச் சமயவேற்றுமை இல்லை-அவர் சிவனைப் பற்றிப் பல இடங்களில் குறிப் பிட்டுள்ளார்-என அப்பெரியாருக்கு அறிவுறுத்துவது. இரண்டாவது :- கம்பராமாயண ஆராய்ச்சியாளர்க்கு உதவக்கூடும் என்பது. இனி அடுத்தாற்போல் பாலகாண்டப் டைம்பொழிலில் உள்ள அணி மலர்கள் சிலவற்றை அணிந்து மகிழலாம்.