பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 201 தாமரை என முகத்தையே தாமரை யாக்கிக் காட்டுவது உருவகம் எனப்படும். ஆங்கிலத்தில் உவமை Simile என்றும், உருவகம் Metaphor என்றும் வழங்கப் பெறுவது ஒப்புநோக்கற்பாற்று. படிக்காத மக்களே -எழுதத் தெரியாத மக்களே உவமையைக் கையாளும் போது, படித்த பாவலர்கள்எழுத்தாளர்கள் உவமையைக் கையாளாமல் விடுவார்களா என்ன? எழுத்துப் படைப்பின் இன்றியமையாத ஒர் உறுப்பு உவமையாகும். கவிஞர்கள் உவமையைக் கையாளும் போது தங்கள் கைவரிசை எல்லாம் காண்பிப்பார்கள்..எவ்வளவுக்கு எவ்வளவு உவமையை ஒருவர் கையாள்கிறாரோ-அவ்வள வுக்கு அவ்வளவு அவரை உயர்ந்த கவிஞராக எடை போடு வாரும் உளர். உவமைக் கவிஞர்' என்றபட்டம் சூட்டுவதும் உண்டு. இந்தக் கலையில் கம்பரும் இளைத்தவரோ-சளைத் தவரோ அல்லர். எங்கெங்கே எவ்வளவு உவமை உருவகங் களைக் கையாள முடியுமோ-அங்கங்கே அவ்வளவையும் கையாண்டுள்ளார். கம்பர் வலிந்து உவமைகளைத் தேடிய வராகத் தெரியவில்லை. கம்பரின் பாடல்களில், இயற்கை யாகவே உவமைகள் ஓடி வந்து விழுந்துள்ளன -என்று கூறலாம். இந்த அடிப்படையுடன், கம்பர் பாலகாண்டத்தில் படைத்துக் காட்டியுள்ள உவமை உருவகச் செய்தி மலர் களைக் கொய்து அணி செய்து மகிழலாம். முகில் உருவாக்கம் திருநீறு அணிந்த சிவன் தோற்றம் போல் வெளுத் திருந்த முகில் (வான்) ஆறுபோல் கடலை அடைந்து, கடல் நீரை மேய்ந்து, திரு மகளை மார்பில் அணிந்துள்ள திருமாலின் நிறம் போல் கறுத்து உருவாகிற்று: நீறணிந்த கடவுள் நிறத்தவான் ஆறணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்