பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பால காண்டப் என்ற தொடர் பொருள் பொதிந்ததாகும். ஆனால் கம்பரின் அடுத்த பாடல்களை நோக்குங்கால், யாரோ ஒருவரைச் சிறப்பாகக் கம்பர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. அவர் வால்மீகியாகவே இருக்க வேண்டும். அந்தப் பாடலை -யும் பார்க்கலாமே. நூல் நூற்றல்! முனிவர்கள் வைது சொன்ன வைவு (சாபம்) தப்பாமல் ஏழு பிறவிகள் வரையிலும் கூடச் சென்று பலிப்பது போல், தவறாமல் ஏழுமராமரங்கள் துளை எய்தும்படி அம்பு எய்த இராமனைப் பற்றிய பெருங்கதையை எழுதிய தவ முனிவனின் நூல் உள்ள இந்நாட்டிலே, எளிமையினும் எளிய சொற்களால் யான் நூல் நூற்கலுற்றேன்! என்ன வியப்பு! 'நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்; எனை! வைத வைவின் மராமரம் ஏழ்துளை எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை செய்த செய்தவன் சொல்கின்ற தேயத்தே' (5) இங்கே தவன் என்பது வால்மீகியைக் குறிக்கும். மராமரம் ஏழ் என்பதை ஏழ் மராமரம் எனக் கொள்ளல் வேண்டும். வைத வைவு என்பது வைத சாபம். இந்தச் சாபம் என்னும் வடமொழிக்கு நேர்த் தமிழ்ச் சொல்லாகக் கெடு மொழி என்னும் குறியீட்டை யான் எழுதுவது வழக்கம். அதற்குப் பொருத்த மான தமிழ்ச் சொல் வைவு எனக் கம்பர் கற்றுத் தந்துள்ளார். 'தவன் சொல் நின்ற தேயத்தை நூற்கலுற்றேன்” என்பது நாட்டின் ஒருமைப் பாட்டை உணர்த்துகின்றது. ஒரே மாதிரியான சொல் வெவ்வேறு பொருளில் பொருந்தி .யுள்ள எய்த எய்தவற்கு எய்திய' என்னும் தொடரில், சொல் பொருள் பின்வரு நிலை அணி அமைந்துள்ளது. *தவன் சொல்’ என்பதில் உள்ள சொல்’ என்பது, ஆகு