பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 பால காண்டப் அரியவட்கு அனல்தரும் அந்தி மாலையாம் கருநிறச் செம்மயிர்க் காலன் தோன்றினான்' (62) செம்மயிர்=செம்பட்டை மயிர். அந்திமாலையாகிய எமன் அனல் கக்கி, தென்றலாம் பாசக் கயிற்றொடு வந்து சீதையின் உயிரைக் கொல்ல முயல்வதாகக் கருத்துக் கொள்ளல் வேண்டும். பிரிந்திருக்கும் காதலர்களை வருத்தும் பொருள்களுள் தென்றல்போல் அந்திமாலையும் ஒன்று. தாமரையும் ஆம்பலும் : ஞாயிறு மறையும் அந்தி மாலை வந்து விட்டதால், தாமரை மலர், தன்னைச் சூழ்ந்திருந்த வண்டுகள் நீங்கி யோட, தன்னிடம் அமர்ந்துள்ள திருமகளோடு குவிந்து மூடிக்கொண்டது. உடனே செவ்வாம்பல் மலரலாயிற்று. இதற்குச் சுவையான ஒப்புமை கூறப்பட்டுள்ளது. ஆணை ஆழியை (ஆக்ஞா சக்கரம்) உருட்டி, உலகுக்குத் தான் ஒருவனே அரசாக ஒரு கோல் ஒச்சி உலகை ஆண்ட பேரரசன் மறைந்ததும், இவ்வளவு காலம் ஒடுங்கியிருந்த குறுநில மன்னர்கள் தலையெடுத்தது போன்று இந்தக் காட்சி இருந்ததாம்: 'விரைசெய் கமலப் பெரும்போது விரும்பிப் புகுந்த திருவினொடும் குரைசெய் வண்டின் குழாம் இரியக் கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால் உரைசெய்தி கிரிதனை உருட்டி ஒருகோல் ஒச்சி உலகாண்ட அரைசன் ஒதுங்கத் தலைஎடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல்” (75) திரு = திருமகள். குறும்பு-குறுநில மன்னர்கள். அரைசன் - அரசன்-இடைப் போலி. ஒரு கோல் ஒச்சி உலகாண்ட என்னும் பகுதி,