பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 209, 'தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்' (; 89–1,2) என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியை நினைவுறுத்து கின்றது. அரக்கு (சிவப்பு) ஆம்பல், ஞாயிறு மறைந்ததும் மலரும். உரைசெய் திகிரிதனை உருட்டி ஒரு கோல் ஒச்சி உலகாண்ட” என்னும் பகுதியை ஞாயிற்றுக்கும் பொருத்தலாம். ஒற்றைத் தேர் ஆழியை (தேர்ச் சக்கரத்தை) உருட்டித் தான் ஒருவனே விண்ணிலிருந்து உலகம் முழுவதற்கும் ஒளிதரும் ஞாயிறு மறைந்ததும் தாமரை குவிய ஆம்பல் மலரும் அல்லவா? உலகாண்டு மறைந்த அரசர் போன்றது மறைந்த ஞாயிறு-என்னும் கருத்து, திவ்வியப் பிரபந்தம்-திரு. விருத்தம் என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது: சீரர சாண்டு செங்கோல் சிலநாள் செலீஇக் கழிந்த பாரரசு ஒத்து மறைந்தது நாயிறு' (80) என்பது நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாடல் பகுதி. பேரரசன் மறைந்ததும் அவனைச் சார்ந்திருந்தவர் களை விரட்டி விட்டுக் குறும்பர்கள் கொட்டம் அடிப்பது போல், இங்கே, தாமரையினிடம் தேனுண்ட வண்டுகள் ஓடி விட்டன-தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகளே மறைக்கப்பட்டு விட்டாள்- என்னும் கருத்து. நயமாயுள்ளது, கைக்கிளைப் படலம் கற்பினார் போல்: இன்ன நாளில் திரும்பி வந்துவிடுவேன் எனத் தம்மிடம் (மனைவியிடம்) காலம் குறிப்பிட்டு, தம்