பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 211 எனவும், ஞாயிற்றைத் தாமரையின் நாயகனாக-நாதனாக அதாவது கணவனாகக் கூறியுள்ளார். பகலில் மலரும் தாமரைக்கு ஞாயிறு கணவன். எனவே இரவில் மலரும் குமுதத்துக்குத் (ஆம்பலுக்குத்) திங்கள் கணவனாம்: காமக் கருத்தா குமுதநாதன் கங்குல்வரக் கண்டும்' என்பது ஒரு தனிப்பாடல் பகுதி. கார் முகப் படலம் சீதையும் கங்கையும் : மிதிலையில் சதானந்த முனிவர் அவையோர்க்குச் சீதையின் பெருமையைக் கூறுகிறார்: வானத்திலிருந்து கங்கை (ஆகாய கங்கை) கீழே வந்ததும் மற்ற ஆறுகள் பெருமை இழந்ததுபோல், சீதை தோன்றியதும் மற்ற பெண்கள் சிறப்பு குன்றினர்- என்றார்: கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில் கங்கை எனும் அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உள்ளார்' (18) ஆறு - மற்ற ஆறுகள். ஆறு = பால்பகா அஃறிணைப்பெயர்; ஒருமைப் பெயரே பன்மையையும் குறிக்கும். வேறு உள்ளார் = மற்ற பெண்கள். புகழ் வேட்ட பொருள் : மேலும் சதானந்தர் கூறுகிறார்: சீதையைப் பெறச் சனகமன்னனோடு வேந்தர் பலர் போரிட்டதால், புகழை விரும்பி அளிக்கும் பொருளேபோல், சனகனது பெரிய படை குறையலாயிற்று. சீதையை விரும்பிய மற்ற மன்னர் களின் படைகள் அவர்களது ஆசையைப் போல் பெருகின: