பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பால காண்டப் வந்தவர்க்குத் தம்மாலான சிறிய உதவியையாவது செய்தனுப்புவதை ஒத்திருந்தது. 'வெள்ள நெடுவாரி அற வீசி உளவேனும் கிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பித் தெள்ளு புனல் ஆறு, சிறிதே உதவுகின்ற; உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த' (23) கிள்ள எழுகின்ற புனல் = குழி தோண்டலால் உண்டான நீர். கம்பரின் இந்தக் கருத்தை, ஒளவையின் நல்வழி நூல் வாயிலாக மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களும் இப்போது அறிவர்: “ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அங்காளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து' (9 ஒளவையின் இநல்வழிப் பாடல் இது. இதற்கு வரலாறுகள் சில பல உண்டு. நாட்டில் இருந்தபோது வரையாது வாரி வழங்கிய குமணன், தம்பியால் காட்டிற்குச் சென்றிருந்த போதும், வந்த புலவர்க்குத் தன் தலையைக் கொண்டு போய்த் தம்பி இகை கொடுத்துப் பொருள் பெறச் சொன்னான். ஆறுபோல் குமண வள்ளல் உதவிய வரலாற்றை, 'தமிழ் நாவலர் சரிதை” என்னும் (தொகை நூலில் உள்ள பழம்பாடலும் அறிவிக்கிறது. பாடல்: "ஆறு பெருக்கற்று அருந்திடர்தான் பட்டாலும் ஊறல் அமையாதோ உலகாற்றத்-தேற வறியை நீ யானாலும் என் கவியை மாற்றச் சிறியையோ சீர்க்குமணா செப்பு' (17)