பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 23 G என்பது அப்பாடல். ஒன்றும் கொடுக்க முடியாத போது, பாம்புப் புற்றில் கையை விட, பாம்பு மாணிக்கத்தைக் கக்க, அதைக் கொண்டு வந்து கொடுத்த வள்ளல் கதை பலரும் அறிந்ததே. இயற்கைக் காட்சிகளின் வாயிலாக, உயர்ந்த கருத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர் கம்பர். வரைக் காட்சிப் படலம் வழியில் மலைகளிலிருந்து, பொன்னையும் சந்தனக் கட்டைகளையும் அடித்துக் கொண்டு ஓடும் வரிசையான அருவிகள், உலகளந்த திருமாலின் மார்பில் அணியும் மேலாடை (உத்தரீயம்-அங்கவஸ்திரம்) போல் தோன்றினவாம். 'அலகில் பொன் அலம்பி ஓடி ஆரம்சேர் அருவிமாலை உலகளந்த வன்தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த’ (15) திருமாலின் மார்பிலும் பொன் (திருமகள்) உள்ளாள். அருவியும் பொன்னை அடித்துக் கொண்டு வருகிறது. நறுமணம் (சென்ட்) ஏற்றிய உடைபோல, நறுமணம் உடைய சந்தனத் துண்டுகள் பொருந்தி வருகின்றன. மற்றும் மேலாடை பலவண்ணம் உடையது போல அருவி யும் பொன் நிறமும் சந்தன நிறமும் உடையதாக உள்ளது. இந்தப் பொருத்தமான உவமை மிகவும் நயத்தற்கு உரியது. பூக்கொய் படலம் கொம்பின் மெலிவும் வலிவும் : பூத்து மெலிந்து வளைந்த சில கொம்புகள் (கிளைகள்) ஆடவரால் தழுவப்பட்டு உடலுறவு கொண்டு மெலிந்த நிலையில் உள்ள மங்கையர் போல் தோற்றம் அளித்தன வாம். தாழ்த்தி வளைக்க முடியாமல் நிமிர்ந்து நிற்கும் சில கொம்புகள், கணவரோடு ஊடல் கொண்டு புணர்ச்சிக்கு