பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பால காண்டப் உடன்படாமல் வீறாப்போடு இருக்கும் மடந்தையர் போல் காட்சியளித்தனவாம். 'உலம்தரு வயிரத் திண்தோள் ஒழுகி வார் ஒளிகொள் மேனி மலர்ந்தபூங் தொடையல் மாலைமைந்தர் பால்மயிலின் அனனாா கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன.சில; கை வாராப் புலந்தவர் போல கின்று வளைகில பூத்த கொம்பர்’ (10) இப்பாடலின் முற்பகுதி ஆடவரின் திண்மையை அறிவிக்கிறது. கொம்பர்=கொம்பு-கடைப் போலி. ஆடவர் ஊடலின் போது மனைவியைக் கெஞ்சுவது போலவும், அப்போது மனைவி வீம்பு காட்டுவது போலவும் கூறுவது ஒருவகை இலக்கிய மரபு. ஆடவர் ஊடலின்போது மனைவி காலில் விழுந்து வணங்குவதாகவும் கூறுதல் உண்டு. சிவபெருமானே உமையின் காலில் விழுந்து வணங்கினாராம். அவரது முடியில் பிறைநிலா, பாம்பு, கங்கை ஆகியவை உள்ளன. அவர் கீழே விழுந்து வணங்கும் போது, உமையின் நெற்றிப்பகையாகிய பிறையும் அல்குல் பகையாகிய பாம்பும் உமையின் காலில் படுதலுக்குக்கூட உமை மகிழவில்லையாம்; சிவனது முடியில் உள்ள தன் மாற்றாளாகிய (சககளத்தியாகிய) கங்காதேவி காலில் படிவதற்காக உமை மகிழ்ந்தாளாம். இதைச் சிவப்பிரகாசரின் பிரபுலிங்கலீலை துதிகதியிலுள்ள. "ஆதி பகவன் தனது ஊடல் தணிப்பபான் பணிய அவ்விறைவன் பாதம் இறைஞ்சு மதற்கும் நெற்றிப் பகையும் அல்குல் பகையுமாம் சீத மதியும் அரவும் விழும் செயற்கும் உவகை செயாமல் அலை மாது பணியுமதற்கு மனம் மகிழும் உமையை - வணங்குவாம்' (2) என்பது கற்பனைக் களஞ்சியத்தின் பாடல்.