பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பால காண்டப் காதலன் மலர் சூட்டி அனுப்யியதால், தோழியோ செவிலியோ கேட்பர். நீ ஆடிய பொய்கை, உதட்டை வெளுக்கவும் கண்ணைச் சிவக்கவும் செய்வதல்லாமல், தலையில் பூச்சூட்டியும் அனுப்புமோ என்று குத்தலாககுறும்பாகக் கேட்பர். இஃது ஒருவகை இலக்கிய மரபு. திருக்கோவையாரில் உள்ள கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக் கண்ணா ரளி பின் வருங்கண் மலைமலர் சூட்டவற்றோ மற்றவ் வான் சுனையே’’ (70) என்னும் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. சுனை = பொய்கை. கம்பர் பழைய இலக்கிய மரபுகளையெல்லாம் நினைவில் வைத்துத் தம் நூலில் பெய்திருப்பது பாராட்டத் தக்கது. கம்பரின் சில பாடல்களைக் காமக்கலைச் சுவை கொண்டு நோக்காமல், இலக்கியக்கலைச் சுவையுடன் நோக்கி இன்புறல் வேண்டும். இந்தப் பகுதியில் உவமை - உருவக அணிகள் இடம் பெற்றன. அடுத்து, மேலும் சில அணிமலர்களைக் கொய்யலாம்.