பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பால காண்டப் புதுமை பார்ப்பார் : பகலில் மலரும் தாமரையும் இரவில் மலரும் குவளை .யும் பெண்களிடத்தில் ஒரே நேரத்தில் பூத்துள்ள புதிய தோற்றத்தைக் கண்டு வண்டுகள் ஒட்டவும் ஒடவில்லை. புதுமை கண்டவர்கள் அந்தக் காட்சியை விட்டு விலகு வார்களா? (மாட்டார்கள்). நேதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு மதிநுதல் வல்லியூப்ப நோக்கிய மழலைத் தும்பி அதிசயம் எய்திப்புக்கு வீழ்ந்தன; அலைக்கப் போகா புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்.' (9) இதில் இரண்டு வியப்புகள் (அதிசயங்கள்) உள்ளன: நீர் நிலையில் பூக்காமல் தாமரையும் குவளையும் பெண் களிடம் பூத்துள்ளன- பகலில் பூப்பதும் இரவில் பூப்பதும் ஒரே நேரத்தில் பூத்துள்ளன-என்பன அவை. புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமைப்பார்ப்பார்”-என்பது வேற்றுப் பொருள் வைப்பு. நல்லன நாடல்: மலர்களில் தேனுண்டு களிக்கும் இயல்புடைய வண்டுகள், மலர் சூடாத உயர்தரப் பெண்டிரின் கூந்தலில் மொய்க் கின்றன; மலர்களில் மொய்க்கவில்லை. நல்லோர் ஆடம்பர ஆரவாரம் நோக்காமல் நல்லனவற்றையே நாடுவது போலத் தான் இது.

துறும் போதினில் தேன்துவைத்து உண்டு உழல் தும்பி

ஈட்டம் நறுங் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார் வெறுங் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல, வேண்டு - போதும் உறும் போகம் எல்லாம் நலன் உள்வழி உண்பர் -- அன்றே (12)