பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 229 கொடுக்கும் சாட்டையடியாகும் இது. இப்பாடலின் இறுதி அடி வேற்றுப் பொருள் வைப்பு. உலாவியல் படலம் இராமன் தெருவில் உலாப் போந்தான். கண்ட பெண் ஒருத்தி மிக்க காதல் கொண்டாள்; மனத்தை இராமன்பால் செலுத்தினாள்; இராமனைக் கண்டு வந்த மற்றொருத்தியை நோக்கி, நீ இராமன் பக்கத்தில் இருந்த என் மனத்தைப் பார்த்தாயா?’ என்று கேட்டாளாம். ஆவல் மேலீட்டால் நாணத்திற்கு இடம் உண்டோ? (இல்லை) 'பெருத்த காதலின் பேதுறு மாதரின் ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் கருத்தும் அவ்வழிக் கண்டது உண்டோ என்றாள் அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ' (37) இராமன்மேல் ஆசை கொண்ட ஒருத்தி, இன்னொருத்தி யிடம் தெரிவிக்கக் கூடாது என்ற நாணம் இல்லாமல் அவளிடம் வினவினாள். ஆசை வெட்கம் அறியாது’ என்பது பழமொழி. அருத்தி= ஆசை. ஈற்றடி வேற்றுப் பொருள் வைப்பு. கோலம் காண் படலம் செய்யவர்ச் சேர்ந்துளார்: சீதைக்குத் தோழியர் அழகு செய்கின்றனர். சிவந்த சீதையின் செந்நிறம், தன் தாளைச் சேர்ந்த தாமரைக்கும் செந்நிறம் தந்ததாம்; மற்றும், மார்பகத்தில் அணிந்துள்ள வெண்ணிற முத்து மாலையையும் செந்நிறம் உடைய தாக்கயதாம். செய்யவரைச் சேர்ந்தவரும் செய்யவர் ஆவர் அன்றோ?

  • மொய் கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை

ஈந்த தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக் கொள்ள, ԼյՈr-15