பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பால காண்டப் மின் கண்டவர் அறியார்: மாடத்தில் சீதையைக் கண்ட இராமன் அன்றிரவு உறக்கம் கொள்ளாமல் சீதையைப் போலவே பிதற்று கிறான்: முன்னர் அவளைப் பார்த்ததும், என் கண்ணாகிய எழுது கோலால் அவளை என் இதயத் திரையில் ஒவிய மாகத் தீட்டிவிட்டேன். ஆயினும் அந்தப் பெண் என்னும் கவர்ச்சியாகிய கடலின் கரையை இன்னும் காண்கிலேன். மின்னல் போல் மிளிர்கிறாள் அவள். மின்னலைக் கண்ட வர்கள் என்ன செய்ய முடியும்: முேன் கண்டு முடிப்பரு வேட்கையினால் என் கண் துணைகொண்டு இதயத்து எழுதிப் பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலேனால் மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே’’ (13) தெருவில் இருந்தபடி முன்னால் ஒரு முறை கண்டான்; இதயத்திலே எழுதிப் பின்பும் கண்டான். ஆயினும் அவளது பேரெழிலை முற்றும் கண்டான் இல்லை. மின்னலைக் கண்டவர் கண்கள் மூடிக்கொண்டு ஒரு வினையும் செய்ய முடியாமல் தவிப்பர். அது போன்றது இராமன் நிலை. பாடலின் ஈற்றடியை வேற்றுப் பொருள் வைப்பு எனலாம். இதுகாறும் வேற்றுப் பொருள் வைப்பு அணிமலர்கள் சில: கண்டோம்; அடுத்து, தற்குறிப்பு ஏற்ற அணிமலர் காண்பாம்.