பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 19 அவதாரம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோற்றம்' என்பது எனக் கம்பரால் இப்பாடலில் அறிவிக்கப்பட்டுள்ளது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இராமாவதாரம்’ என்னும் நூல் பற்றியும், சடையப்ப வள்ளலைப் பற்றியும் ஈண்டு ஒரு சிறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில் நூல் பெயரை எடுத்துக் கொள்ளலாம் : இராமாவதாரம் முதலில் கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் கூறிப் பின், இராமாவதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை’ என நூற்பெயர் கம்பர் கூறியிருந்தும், பிற்காலத்தில் இராமாவதாரம் என்னும் பெயர் மறைந்து இராமாயணம் என்னும் பெயருக்கு இடம் தந்து விட்டது. இதுபிற்காலத்தார் இட்ட பெயராகும். கம்பர் அக்கால முறையைப் பின்பற்றி யுள்ளார். 4ஒப்பிலக்கியம் காண்டல்' என்ற முறையில், மூன்று நூல் களில் உள்ள இந்த அமைப்பினை இவண் காணலாம். 1. திருமந்திரம் திருமந்திரம் அளித்த திருமூலர் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடி, பின்னர் அவையடக்கம் கூறுகிறார். இறைவன் பெருமையை யாரால் அறிய முடியும்? ஓர் அடிப்படையும் அறியாத யான் பாடத் தொடங்கி விட்டேன். ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யாரறிவார் இந்த அகலமும் நீளமும் பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின் றேனே?? (95) என்பது.பாடல். பின்னர், நூல் பெயரும் பயனும் கூறுகிறார் மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் ஞாலம் அறியவே கந்தி அருளது காலை எழுந்து கருத்தறிந்து ஒதிடின் ஞாலத் தலைவனை கண்ணுவர் அன்றே' (99)