பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.3. தற்குறிப் பேற்ற அணி ஒரு பொருளின் நிகழ்ச்சி இயல்பாக-இயற்கையாக நிகழ, புலவன் அதை விட்டு, இன்ன காரணத்தால் இது நிகழ்கிறது என்று தானாகத் தன் குறிப்பை-தன் கருத்தை ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்: 'பெயர் பொருள் அல்பொருள் என இரு பொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயலொன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்' (56) என்பது தண்டியலங்கார நூற்பா. இதற்கு ஒர் எடுத்துக் காட்டு விளக்கம் காண்பாம். காலையில் ஞாயிறு தோன்றுகிறது-இருள் மறைகிறதுதாமரை மொக்குகள் விரிந்து மலர்கின்றன-இது இயற்கையாக நடப்பது. ஆனால் ஒரு புலவன் என்ன சொல்கிறான் : ஞாயிறு தோன்றி முற்றிலும் இருட்டை ஒட்டுகிறது. தாமரை மொக்குக்குள்ளே இருள் மறைந்திருக்குமோ என்று ஐயுற்றுத் தன் கதிராகிய-ஒளியாகிய கையால் தாமரை மொக்கின் இதழைத் திறந்து பார்க்கிறது-என்று புலவன் தானாக ஒரு கற்பனைக் காரணத்தைக் குறித்து ஏற்றுகிறான். இதுதான் தற்குறிப் பேற்ற அணியாகும், இனிக் கம்பரிடம் செல்வாம் :