பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 237 அகலிகைப் படலம் வெம்மை ஆற்றுதல்: விசுவாமித்திரன், இராம-இலக்குமணர் ஆகிய மூவரும் காட்டில் சோணையாற்றங்கரையை அ ைட ந் த ன ர். அப்போது ஞாயிறு மேற்குக் கடலில் மூழ்கி மறைந்தான். பகல் முழுதும் வெப்பம் iசினோம்-நாளை காலை யிலாவது மூவர்க்கும் குளிர்ச்சி தரவேண்டும் என்று எண்ணி, ஞாயிறு தன் வெப்பத்தைத் தண்ணிரில் மூழ்கி ஆற்றிக் கொள்வதற்காகக் கடலில் மூழ்கியது போல் இருந்தது. "நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக் கதிக்கு முந்துறு கலினமான் தேரொடும், கதிரோன் உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில் கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல் கடல் குளித்தான்' (2) அருணன் = ஞாயிற்றின் தேர்ப்பாகன். கலினமான் = கடிவாளம் பூட்டிய குதிரை. அருணனின் கண் பார்வை செல்லும் தொலைவுக்கு அப்பாலும் மிகவும் விரைவாகச் செல்கின்றனவாம் குதிரைகள். ஏழு குதிரைகள் பூட்டி ஒற்றை ஆழித் தேரை அருணன் செலுத்த ஞாயிறு உலா வருவதாகக் கூறுவர். கடல் = மேற்குக் கடல் (அரபிக்கடல்). ஞாயிறு இயற்கையாக மேற்குக் கடல் பக்கம் சாய்ந்து மறைவது போல் தோன்ற, மூவருக்கும் மறுநாள் காலை குளிர்ச்சி தருவதற்காகத் தன் வெப்பத்தை ஆற்றிக் கொள்ளக் கடலில் ஞாயிறு படிந்ததாகக் கூறுதல் தற்குறிப் பேற்றம். மிதிலைக் காட்சிப் படலம் மிதிலை நகரில் கொடிகள் அசைந்தாடுவதைக் கம்பர் அழகு செய்து கூறுகிறார். தாமரை மலரில் இருந்த