பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ஒரு கண்ணோட்டம் தொடர்புடைய தொகுப்பு: பாலகாண்டப் பைம்பொழில் என்னும் இந்த நூலில் உள்ள கட்டுரைகள் தனித்தனி உதிரிகள் அல்ல. எனவே, இந்நூல், தனித் தனி உதிரிக் கட்டுரைகளின் தொகுப்பு அன்று. பல மரஞ்செடி கொடிகளை உடைய ஒரு தோப்பு போல், பாலகாண்டம் என்னும் ஒரே காண்டம் பற்றிய தொடர்புடைய கட்டுரைகளின் தொகுப்பு, இந்நூல் பாலகாண்டத்தில் உள்ள செய்திகளைப் பன்னிரண்டு தலைப்புகளாகப் பிரித்து, ஒவ்வொரு தலைப்போடும் தொடர்புடைய பாடல்களை அனைத்துப் படலங் களினின்றும் தேர்ந்தெடுத்து இந்நூலில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. - - படலம் வாரியாகத் தொடர்ந்து கருத்துகளைச் சொல்லிக்கொண்டு போனால், கதைத்தொடர்பு அறாமல் இருக்கும். இஃது ஒருமுறை. இந்த முறையினால், பல்வேறு தலைப்புகள் பற்றிய செய்தியை ஒரு சேரத் தொகுத்துத் தெரிந்துகொள்ள முடியாது. யான் இந்நூலில் கையாண்டுள்ள முறை, ஒவ்வொரு தலைப்பைப் பற்றிய செய்தியெல்லாம் ஒருசேர அறிந்துகொண்டு அது-அது தொடர்பாக ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்க்குத் துணை புரியலாம். படலம் வாரியாகக் கதைத் தொடர்பு அறாமல் சிலரால் எழுதப்பட்டுள்ள வேறு சில நூல்கள் உள்ளன;