பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பால காண்டப் அந்த வகையில் விருப்பம் உடையோர் அந்நூல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரிய இராமாயணம்: 'தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினான் உரையின் படி நான்தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பரோ" (10) எனக் கம்பர் பாயிரப் பகுதியில் நூல்வழி கூறியுள்ளார். தேவபாடை = சம்சுகிருதம். சம்சுகிருத நூலை முதல் நூலாகக் கொண்டு அதன் வழித் தாம் தமிழில் தம் நூலை இயற்றியதாகக் கம்பர் அறிவித்துள்ளார். இந்திய மொழிகள் பலவற்றில் இராமாயணக் கதை எழுதப்பட்டுள்ளது. கதையில் பெரிய மாற்றங்கள் உள்ள படைப்புகளெல்லாம் உள்ளன. பெளத்த ராமாயணம், சைன ராமாயணம் என்பனவும் உண்டு, பெளத்த ராமாயணத்தில், சீதை இராமனின் தங்கை எனவும், இராமன் தங்கை சீதையை மணந்து கொண்டான் எனவும் உள்ள செய்திகள் நமக்கு வியப்பளிக்கிறது. பண்டு, வடக்கே, அண்ணன் தன் தங்கையை மணக்கும் மரபு பெளத்தர்களிடத்தில் உண்டெனத் தெரிகிறது. சீதை இராவணனது தங்கை என்று சொல்லும் செய்தியும். அடிபடுகிறது. தமிழில் கி. பி. 18 ஆம் நூற்றாண்டினரான அருணாசலக் கவிராயர் என்பவர் இராம நாடகக் கீர்த்தனை” என்னும் பெயரில் இராம காதை பாடியுள்ளார். இதற்கு-முன்னும் கம்பர் காலத்திற்கு முன்னும் தமிழில் ஆசிரியப் பாவால் இயற்றப்பட்ட இராமாயணம் ஒன்று இருந்தமை புலனாகிறது. இந்தச் செய்தி, இந்நூலில், கருத்து வெளியீட்டில் புதுமை’ என்னும் தலைப்பிலும் கூறப்பட்டுள்ளது. தமிழில் ஆசிரியப் பாவால்