பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பால காண்டப் திருமூலர் நூலுக்கு இட்ட பெயர் மூவாயிரம் தமிழ்' என்பது இப்பாடலால் தெரிகிறது. பிற்காலத்தில் இந்நூலின் அருமை பெருமை அறியப்பட்டுத் திருமந்திரம்’ என்னும் பெயர் சூட்டப்பட்டது. இந்நூலை ஓதின் இறைவனை அடையலாம் என்பது நூல் பயனாகும். அடுத்துச் சேக்கிழாரிடம் செல்வோம். 2. பெரியபுராணம் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் முதலில் பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்துப் பாடியபின் அவையடக்கம் கூறுகிறார்: திருத்தொண்டர்களின் பெருமை அளப் பரியது. பெரிய கடல் நீரை ஒரு நாய் ஆசையால் குடிக்க முற்பட்டது போல், யான் தொண்டர் பெருமை ஆசையால் கூறலுற்றேன் என்கிறார்:

  • அளவிலாத பெருமைய ராகிய

அளவிலா அடியார் புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்பரி தாயினும் அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்' (5) தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர்தம் பொருவருஞ்சீர்ப் புகலலுற்றேன் முற்றப் பெருகு தண்கடல் உற்று உண் பெருகசை ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்” (6) கம்பரைப் போலவே, சேக்கிழாரும் ஆசைபற்றிக் கூறினாராம். கம்பர், கடலைப் பூனை பருக நினைப்பது போல்-என்று கூறினார். சேக்கிழார் நாய் குடிக்க நினைப்பதுபோல்'- என்று கூறியுள்ளார். எனது உரை அற்ப மாயினும் பெரியோர்கள் ஏற்றுக் கொள்வர் எனச் சேக்கிழாரும் கம்பரைப் போல் அறிவித்துள்ளார். இப்பொருட்கு என் உரை சிறிதாயினும் மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்” (7): என்பது பாடல் பகுதி. கம்பர் சடையப்ப வள்ளலைக்