பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 245 இப்படி ஒர் இராமாயணம் இயற்றப்பட்டிருந்தது என்பதற்கு மற்றொரு சான்றும் தர இயலும். தொல்காப்பியம்பொருளதிகாரம்-புறத்திணையியலின் 21 ஆம் நூற்பாவின் உரையில் அரசு கட்டில் நீத்த பால்’ என்னும் பகுதிக்கு எடுத்துக் காட்டாக நச்சினார்க் கினியர் பின்வரும் பாடலைத் தந்துள்ளார். கடலும் மலையும் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினும் நொய்தா லம்ம தானே இ.தெவன் குறித்தனன் நெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை இராமன் தம்பி ஆங்கவன் அடிபொறை யாற்றி னல்லது முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே' என்பது பாடல். இது நேரிசை ஆசிரியப்பா. இராமனின் தம்பியாகிய பரதன், இராமனின் அடிகளைச் (பாதுகை களைச்) சுமந்தானே தவிர, அரச முடியைச் சுமக்க வில்லை-என்னும் செய்தி இப்பாடலில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பாடலும் ஆசிரியப் பாவாய் இருப்ப தால், தமிழ் மொழியில் ஆசிரியப் பாவால் ஆன இராமாயணம் ஒன்று இருந்திருக்கிறது என்பது புலனாகும். இந்த இராமாயணத்தில், கம்பர் கூறியுள்ள தினும் சில வேறுபாடுகள் உண்டு என்பதை முன்னர் கருத்து வெளியீட்டில் புதுமை’ என்னும் தலைப்பில் எடுத்துக் காட்டப்பட்டிருப்பதைக் கொண்டு துணியலாம். தமிழ் மரபு காதல் தொடர்பான அகப் பொருள் இலக்கணம் தமிழ் மொழிக்கே உரிய சிறப்புக் கூறாகும்-என்று சொல்லப் படும். அந்த மரபைக் கம்பர் பால காண்டத்தில் மிகவும் பின்பற்றியுள்ளார். சங்க இலக்கியங்களில் காதல் செய்தி பெயர் சுட்டாமல் சொல்லப்பட்டிருக்கும்; அங்ங்னம் இருப்பதுதான் அகப் பொருளாகும்; பெயர் சுட்டின் அது பா-16