பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 247 இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் - மனையறம் படுத்த காதையில், கண்ணகியை நோக்கிக் கோவலன், 'மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை...' (73-80) என்று நலம் பாராட்டுவதாகப் பாடியுள்ளார். இது இயற்கைக்கு உகந்ததா? இல்லையே. இந்தக் காலத்தில், முதல் இரவு அறையில், மணமகன் மணமகளை நோக்கி இவ்வாறு புனைந்துரைக்கத் தொடங்கினால், மணமகள் என்ன நினைப்பாள்? பைத்தியம் என்னென்னவோ உளறுகிறதே - இதைச் சென்னை-10-கீழ்ப்பாக்கம் போகும் வண்டியில் அல்லவா ஏற்றிக் கொண்டுபோய் விட வேண்டும்-என்றெல்லாம் நினைக்கக் கூடும் அல்லவா? ஆனால் இளங்கோவடிகள் ஏன் இப்படிப் பாடினார் என்றால், அடுத்த அரங்கேற்று காதையிலேயே கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவிபால் சென்று விடுகிறான். அதனால், காப்பிய முன்னோட்டச் சுவைக் காக இளங்கோ இவ்வாறு பாடினார். இளங்கோவைப் போலவே, கம்பரும் காப்பியச் சுவைக்காக இவ்வாறு பாடினார் எனலாம். எவ்வாறெனில், பால காண்டம் கடந்ததும், இறுதி யுத்த காண்டம் வரையும், பிரிவு-இறப்பு-போர்-கொலை-ஐயம்-துன்பம். துயரம் முதலிய தீய சூழ்நிலைகளே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. அதனால் கம்பர் அவாத் தீரப் பால காண்டத்தில் காதல்-காமச் சுவையை மழையெனப் பொழிந்து தள்ளி விட்டார்.