பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 21 குறிப்பிட்டிருப்பதுபோல்,சேக்கிழார் அநபாய சோழனைக் குறிப்பிட்டுள்ளார்.

தூய பொன்னணி சோழன் நீடுழிபார்

ஆய சீர் அநபாயன் அரசவை' (8) என்பது பாடல் பகுதி. சேக்கிழார் தமது நூலுக்குத் திருத்தொண்டர் புராணம்' என்னும் பெயரைத்தான் இட்டார். இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள் தங்கிருள் இரண்டில் மாக்கள் சிங்தையுள் சார்ந்து கின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம் (10) என்பது பாடல். சேக்கிழார் இட்ட திருத்தொண்டர் புராணம்' என்னும் பெயர், பின்னர், அதன் அருமை பெருமை கருதிப் பெரிய புராணம் என அன்பர்களால் வழங்கப்படலாயிற்று. அடுத்து, மாணிக்கவாசகரிடம் செல்வோம். 3. திருவாசகம் திருவாசகம் அருளிய மாணிக்க வாசகரும், முதற் பகுதியில் கடவுள் வணக்கம் கூறிப் பின் நூல் பெயர் அவையடக்கம்-நூல் பயன் ஆகியவை கூறியுள்ளார்: கசிவன் அவன் என் சிங்தையுள் கின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள்வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பன்யான்.பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.' ւյնr-2