பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பால காண்டப் (சடையன் சோழ மன்னனிடத்தில் அலுவல் பார்த்ததும் உண்டாதலால், போர் வேல் சடையன்' எனப்பட்டான்.) "புரந்தர தாரு புதுவைச் சடையன் இருந்த வியலூர் தெற்கு மேற்கு-பரந்தபொன்னி ஆற்று நீரால் விளையு மப்பாற் கிழக்காகி மாற்று நீரால் விளைவு மாம்” இனிச் சடையன் மகன் சேதிராயனைப் பற்றிய பாடல் வருமாறு : - காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மரபை நாவலரைக் காவலரை நல்லோரை பூவலயம் உள்ளத் தகும்புதுவை ஊரைச் சிறப்பித்தான் பிள்ளைப் பெருமாள் பிறந்து' என்பது பாடல். சடையனுக்குப் பிறந்த பிள்ளைப் பெருமாள் சேதிராயன் என்பவன். மேலுள்ள பாடல்களில் அறிவிக்கப்பட்டுள்ள சங்கரன், சடையன், காவிரி, சோழ, மண்டலம் என்னும் பெயர்களை நோக்குங்கால், வெண்ணெய் நல்லூர், தஞ்சை மாவட்டத்து வெண்ணெய் நல்லூராகவே இருக்கவேண்டும் என்பது தெளிவு. இலங்கையில் கருப்பு (பஞ்சம்) ஏற்பட்ட காலத்தில் சடையன் கப்பல் கப்பலாய் அரிசி அனுப்பியதால், இலங்கை மன்னன் பரராச சிங்கன், காவிரியோடும் சோழமண்டலத். தோடும் தொடர்புறுத்திச் சடையனைப் புகழ்ந்து பாடி யுள்ளான். தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் சடையன் இருந்திருந்தால், கப்பல் கப்பலாய் இலங்கைக்கு அரிசி அனுப்பியிருக்க முடியாது. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவனாயிருந்ததாலேயே கப்பல் கப்பலாய் அரிசி: அனுப்ப முடிந்தது. பால காண்டத்தில் - மிதிலைக்காட்சிப் படலத்தில் கம்பர் பாடியுள்ள ஒரு பாடலும் இதற்குச் சான்று பகரும்.