பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பால காண்டப்

எதிர்வரு மவர்களை எமையுடை இறைவன்

முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிதர எதுவினை? இடர் இலை? இனிது நும் மனையும் மதிதரு குமரரும் வலியர் கொல்? எனவே'- (130) கையடைப் படலம் புகழ்ந்து கேட்டல் வசதியான ஒருவரிடம் உதவி கேட்கச் செல்லும் ஒருவர், முதலில் அவரைப் புகழ்ந்து பின்னர் உதவி வேண்டுதல் ஒருவகை உலகியல். உங்களைப் போன்ற பெரியவர்கள்- நல்லவர்கள் இருப்பதனால்தான் எங்களைப் போன்றோர் வாழ முடிகிறது. எத்தனையோ பேருக்கு நீங்கள் உதவி செய்துள்ளீர்கள். உங்களுக்குச் சமுதாயத் தில் நல்ல பெயர் உண்டு. என் போன்றோர் உதவி வேண்டின், உங்களிடமே வரவேண்டும்- என்றெல்லாம் புகழ்ந்து அடிப்படை போட்டுப் பின்னர் உதவி கேட்பது ஓர் உலகியல் நடைமுறை. விசுவாமித்திர முனிவர் வேள்வி காக்கத் தயரதனிடம் இராமனைக் கேட்டுப் பெறுவதற்காகத் தயரதனிடம் வந்துள்ளார். தயரதன் வணங்கி வரவேற்றான். பின்னர் முனிவர் மன்னனை நோக்கிக் கூறுகிறரர்: ‘'என் போன்ற முனிவர்களும் தேவர்களும் தமக்கு இடையூறு ஏற்பட்ட போது அதைப் போக்கிக் கொள்ள, சிவனிருக்கும் வெள்ளிமலை, திருமாலிருக்கும் பாற் கடல், நான்முகனது நகரம், இந்திரனின் கற்பக நகரம், நீ இருக்கும் அயோத்தி ஆகிய இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு புகலிடம் உண்டா? இல்லையே! இந்திரன் சம்பராசுரனால் அரசிழந்து நின்னிடம் வந்து குறையிரந்தபோது, நீ சென்று சம்பரனைக் கொன்று மீட்டுக் கொடுத்த அரசு அல்லவா வென்று அவ்விந்திரன் இப்போது ஆள்வது?’ என்றெல்லாம் மன்னனைப் புகழ்ந்தார். பின், மன்னன், நீங்கள் வந்தது