பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பால காண்டப் வேள்விப் படலம் தாரை வார்ந்து விடுதல் நெடியவனான திருமால் குறிய வாமன வடிவத்துடன் மாவலியிடம் வந்து மூன்றடி மண் கேட்க, பெற்றுக் கொள்க என மாவலி வாமனன் கையில் தாரை (நீர்) வார்த்தான். அந்நீரில் வாமனன் கையே நீட்டி ஒப்புக் கொண்டதை உணர்த்தினான். 'அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என, நெடியவன் குறியகை நீரில் நீட்டினான்' (23) ஒரு பொருளை இன்னொருவர்க்குக் கொடுக்கும்போது தாரை (நீர்) வார்த்தல் ஒருவகை மரபு, இந்த மரபு, தாரை வார்க்காவிடினும், ஒருவர்க்கு மற்றொருவர் கொடுத்ததைத் 'தாரை வார்த்து விட்டார்' எனக் கூறும் அளவுக்கு நாளடைவில் மாறிவிட்டது. இது, இன்னும் நாளடைவில், ஒரு பொருள் காணாது தொலைந்து போயினும், தாரை வார்ந்து விட்டது' என்று கூறும் வகையில் மாறிவிட்டது. மேலும் நாளடைவில், தாரை வார்ந்து விடுதல்’ என்பது மக்களது கொச்சைப் பேச்சு நடையில் தாராந்து விட்டது" என்றும் சொல்லப்படுகிறது. ஒருவர் முன் ஒருவர் விசுவாமித்திரரின் வேள்வியைக் குலைக்க வந்த அரக்கர்கள் பலரை இராமன் கொன்றான். எஞ்சிய அரக்கர் சிலர், நம்மையும் கொல்வர்-நாம் ஓடி விடுவோம் என்று சொல்லிக் கொண்டு பிணங்களை மிதித்துக் கொண்டு ஒருவர்க்கு முன்னால் ஒருவர் ஓடினராம். "பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டுஎனா உணர்த்தினர் ஒருவர்.முன் ஒருவர் ஓடினார் (42) இடுக்கண் நேர்ந்த போது ஒருவரை முந்திக்கொண்டு ஒருவர் ஓடுவது உலகியலில் உண்டன்றோ?