பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 37 இத்தனை ஊர்தி மீதும் ஏற்றியே கொணர்ந்த சீர்கள் மொத்தமும் இறக்க ஒர்நாள் முழுவதும் போதவில்லை. தத்தைநேர் பெண்ணைப் பெற்றோர் தணத்திட உளமே இன்றி முத்தினைக் கண்கள் சிந்த மூதரண் மனையில் சேர்த்தார். (9-5) என்பது பாடல். கடிமணப் படலம் திருமண நீராட்டு உலகியலில் நாட்டு மக்கள், திருமணத்தின் போது மணமகனை, பல இடத்து நீர் கலந்த தண்ணிரால் முழுக் காட்டாவிடினும், அறுபதாம் கல்யாணம்’ என்று பெயர் வழங்கப் பெறும் அறுபது ஆண்டு நிறைவு மணி விழாவின் போது, கங்கை-காவிரி முதலிய பல ஆற்று நீர்களும் கடல் நீரும் கலந்த தண்ணிரால் கிழ மணமக்களை முழுக்காட்டும் மரபு உண்டு. இராமன் மன்னன் மகன் அல்லவா? ஏழு கடல்களிலிருந்தும் கங்கை முதலிய ஆறு களிலிருந்தும் கொண்டு வந்து கலந்த மங்கல நீரால், மணமகன் இராமனை முழுக்காட்டினர். கசங்கினம் தவழ் கடல் ஏழில் தந்தவும் சிங்கலில் அருமறை தெரிந்த தீர்த்தங்கள் கங்கையே முதலவும் கலநத நீரினால் மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே' (48) அம்மி மிதித்தல் வைதிகச் சடங்குத் திருமணங்களில் அம்மி மிதித்தலும் அருந்ததி காணலும் நிகழும். இங்கும் அவை நிகழ்ந்தனவாம். - பா-3