பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பால காண்டப்

இலங்கொளி அம்மி மிதித்து எதிர்கின்ற

கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார்' (91) என்பது பாடல் பகுதி. பரசுராமப் படலம் தினவு தீர்த்தல் இராமன் அனைவரும் புடைசூழத் திருமணக் கோலத் துடன் மிதிலையிலிருந்து அயோத்திக்குச் சென்றான். வழியில், தயரதனது குலப்பகைவனாகிய பரசுராமன் இராமனை இடை மறித்து, நீ மிதிலையில் ஒடித்த வில்லின் நிலையை யான் அறிவேன். இப்போது உனது வலிமையை அறிய விரும்புகிறேன். என் தோள்கள் தினவு கொண் டுள்ளன. உன்னோடு பொருது தினவு தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே வந்துள்ளேன்-என்றான்.

இற்றோடிய சிலையின் திறம் அறிவேன் இனியான் உன் பொற்றோள் வலிநிலை சோதனை புரிவான் நசை

உடையேன் செற்றோடிய திரள்தோள் உறுதினவும் சிறிதுடையேன் மற்றோர் பொருளிலை இங்கிது என் வரவு என்றனன் உரவோன்' (18) தினவு தீர்த்தல்' என்ற வழக்காறு உலகியலில், உண்டு. 'முதுகு ஊருகிறதா? தினவு தீர்க்க வேண்டுமா? (உதை வேண்டுமா)-என்று கேட்பதும் உண்டு. இவ்வாறாக, கம்பர் உலகியல் நடைமுறைகள் பலவற்றைத் தம் நூலில் தந்து கற்போர் உள்ளம் களிக்கச் செய்துள்ளார். கல்வியறிவோடு பட்டறிவும் இருந்தாலேயே அறிவு முழுமை பெற்றதாகும். இதை அடுத்துப் புதுமைக் கனிகள் சிலவற்றைச் சுவைக்கலாம்.