பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கருத்து வெளியீட்டில் புதுமை கருத்தை வெளியிடுவதில் புதுமை இருக்க வேண்டும். பசு பால் தரும். பால் வெள்ளையாயிருக்கும் என்றால் இதில் புதுமை வெளியீட்டுப் பங்கு இல்லை. கறுப்பு-சிவப்பு மாடுகளின் பாலும் வெண்மையா யிருக்கும். தண்ணிர் மிகுதியாய் ஊற்றினாலும் பால் வெண்மையா யிருக்கும்என்றாவது எழுதினால் ஒரு சிறிது புதுமை தெரியும். இது கூடப் போதாது. பசு பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால் தருகிறது என்று எழுதினால் இன்னும் சுவையாயிருக்கும். 'பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தர நீ என்ன பக்குவம் செய்வாய் அதனைப் பகருவையோ பசுவே! (மலரும் மாலையும்-பசு) என்னும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கருத்து வெளியீடு மிக்க சுவையாயுள்ளதல்லவா? இனி, கம்பரின் புதுமைக் கருத்து வெளியீட்டுக் கனிகள் சிலவற்றைப் பால காண்டத்திலிருந்து காண்பாம். நாட்டுப் படலம் இல்லாதவை : கோசல நாட்டில் உள்ள மக்களுக்கு எமனைப் பற்றிய அச்சமே இல்லையாம். அவர்தம் உள்ளத்தில் சினமே எழாதாம். அங்கே உயர்வே அன்றி இழிவு கிடையாதாம். இவற்றைச் சொல்ல வந்த கம்பர், சுவை கூட்டிச் சொல்