பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பால காண்டப் இன்மையால் இல்லை: கோசல நாட்டு மக்களிடம் வள்ளல் பண்பும், வலிமை யும், உண்மையும், ஒன்றும் அறியாத வெள்ளைத் தன்மை யும் இல்லையாம் என்று கூற வந்த கம்பர் அதற்குக் காரணமும் கூறுகிறார். எவரிடமும் வறுமை என்பதே சிறிதும் இல்லாமையால், ஒருவர் மற்றொருவர்க்கு, உதவுவதான வள்ளல் பண்புக்கே அங்கு இடமில்லை. பகைவரே இல்லாமையால் (பகைவர் அஞ்சுவதால்) வலிமைக்கே-வீரச் செயலுக்கே வாய்ப்பில்லை. எவரும் பொய்யே பேசாமையால், உண்மை என்ற ஒரு பண்பு இருப்பதாக அறியப்படவில்லை. பல்வகைக் கல்வி கேள்வி அறிவைப் பெற்றிருப்பதால், மக்களின் அறிவுடைமையில் வெறுமைக் கூறே இல்லை. பாடல் : 'வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால் உண்மை இல்லை பொய்யுரை இலாமையால் ஒண்மை இல்லை பல கேள்வி ஓங்கலால்' (53) பின்னால் நகரப் படலத்திலும் இது போன்றதொரு கருத்தைக் கம்பர் கூறியுள்ளார். வனவசை மாநகரில் திருடர்கள் இல்லாததால் எந்தப் பொருளுக்கும் காவல் வேண்டியதில்லையாம்; கொள்பவர்கள் இல்லாமையால் கொடுப்பவர்களும் இல்லையாம். (பிரபுலிங்கலீலை) சோவியத் (ரஷ்ய) நாட்டிலும், அரபுநாடுகள் சில வற்றிலும் போட்டபொருள் போட்ட இடத்தில் கிடக்குமாம். களவு போகாதாம்.இதுபற்றிக் கம்பர் பல நூற்றாண்டுகட்கு முன்பே கனவு கண்டுள்ளார். 'வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் என்பது போன்றதொரு கருத்து, சிவப்பிரகாச அடிகளார் இயற்றிய பிரபுலிங்கலீலை என்னும் நூலிலும் மாயையின் உற்பத்தி கதி என்னும் பகுதியில் உள்ளது. வனவசை மாநகரில் உடை, உணவு, மலர், அணிகலன், உறைவிடம்