பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பால காண்டப் அந்நாட்டிலுள்ள சரயு ஆறு நாடு முழுதும் பல கால்களால் (கால்வாய்களால்) ஒடியும் நாட்டின் பரப்பை அறிய முடியவில்லையாம். "சோலை மாநிலம் துருவி யாவரே வேலை கண்டுதாம் மீள வல்லவர் சாலும் வார்புனல் சரயுவும் பல காலின் ஓடியும் கண்டது இல்லையே' (60) கோசல நாடு மிகப் பெரிய நாடு என்பதைக் கம்பர் இவ்வாறு புதுமுறையில் அறிவித்துள்ளார். சரயு ஆறு பல கால்களால் ஒடியும் காண முடியாத எல்லையை, இரு கால்கள் மட்டும் உடைய மக்கள் எவ்வாறு காண முடியும்?முடியாது. வேலை = எல்லை, சாலும் = மிகுந்த, அரசியல் படலம் கரு வெளுப்பு: தயரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர்; மசக்கை நோயால் தொல்லைப் பட்டனர்; உடல் வெளுத்தனர். மசக்கையும் உடல் வெளுப்பும் கருவுற்றார்க்கு உண்டாதல் இயல்பு. இங்கே, உடல் வெளுப்பைக் கம்பர் ஒரு புது முறையால் அறிவித்துள்ளார். அதாவது, பெண்களின் முகத்திற்குத் திங்களை உவமிப்பது மரபு. இவர்கட்கு முகம் திங்கள் போல் இருப்பதன்றி, உடம்பும் வெண்திங்கள் போல் வெளுத்திருந்ததாம். திங்களின் நிறம் வெண்மை என்பது இலக்கியமரபு. தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின் பொருவரு திருமுகம் அன்றிப் பொற்புகீடு உருவமும் மதியமோடு ஒப்பத் தோன்றினார்’ (98) வயா= மசக்கை நோய். பொற்பு = அழகு. ஆறு கிறைத்த கடல்: தயரதனின் மக்கள் நால்வருக்கும் வசிட்ட முனிவர் பெயர் சூட்டியபின், பெயர் சூட்டு விழாவின் ஒர்