பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:50 பால காண்டப் உள்ள உம்மைகளை நிகழ்வது தழி இய எச்ச உம்மைகள் எனலாம். இதற்கு இலக்கிய ஆட்சி ஒன்று காண்பாம்: 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்பதுதான் அந்த ஆட்சி. அண்ணலும் நோக்கினான் என்பதில் உள்ள உம்மை, சீதையும் நோக்கினாள் என்பதைத் தழுவுகிறது. அவளும் நோக்கினாள் என்பதில் உள்ள உம்மை, இராமனும் நோக்கினான் என்பதைத் தழுவுகிறது. இவ்விரண்டனுள் முன்னால் நடந்த இறந்தது எது?- பின்னால் நடந்த எதிரது எது? இல்லைஇறந்ததோ, எதிரதோ இல்லவே இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால், அண்ணலும் அவளும் என்ற உம்மைகள் நிகழ்வது தழி இய எச்ச உம்மைகளாம். சிலர், இட முன்- கால முன் என்னும் கரடி விட்டு இந்தக் கருத்தைக் குலைக்கப் பார்க்கலாம். இங்கே எந்த முன்னும் எந்தப் பின்னும் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், இவற்றை நிகழ்வது தழி இய எச்ச உம்மை எனக் கூசாது கூறலாம். இந்தப் புதுமையைக் கம்பர் பாடல் அறிவிக்கிறது. கண் வழிக் கள்வன்: சீதை இராமனைக் கண்டதால் காதல் வயப்பட்டு வருந்துகிறாள். என் பெண்மையையும் நாணையும் யான் காண்கிலேன். தெருவில் சென்ற அவன் என் கண்ணின் வழியாக என்னுள் புகுந்து அவற்றைத் திருடிக்கொண்டான். இவன் ஒரு புதுவகைக் கள்வனாவான்: பாடல்: பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும் எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் மண்வழி நடந்து அடிவருந்தப் போனவன் கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்' (55) ஆறுதல் உரை: தமக்கு எதிரியாக இருக்கும் ஒருவரைத் தம் வழிக்குக் கொண்டு வர நான்கு வழிகளைக் கையாளுதல் உண்டு.