பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம்பொழில் 57 'கொல் ஆழி நீத்து அங்கோர் குனிவயிரச் சிலைத் தடக்கைக் கொண்ட கொண்டல் எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடிவருடி அனந்தல் தீர்ப்ப, அல் ஆழிக் கரை கண்டான்; ஆயிரவாய் மணிவிளக்கம் அழலும் சேக்கைத் தொல் ஆழித் துயிலாதே துயர் ஆழி யிடைக் கிடந்து துயில்கின் றானே’’ (17) கொல் ஆழி=கொல்லும் சக்கரப்படை. அல் ஆழிஇரவாகிய கடல். தொல் ஆழி = பழைய பால் கடல். துயர் ஆழி - துன்பக் கடல். அனந்தல் = தூக்கம். இரவாகிய கடலின் கரையைக் காணுதல் = என்றால், பொழுது விடியத் துயில் எழுதல். ஞாயிறு புறப்பட்டுத் தூக்கத்திலிருந்து எழுப்பியதாக உலகியலில் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. இங்கும் ஞாயிறு அவ்வாறு எழுப்பியதாகச் சொல்லப் பட்டுள்ளது. வரலாற்றுப் படலம் வில்லும் காண்பார் : சனகனது அரண்மனையில் விசுவாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குமணனும் சென்று அமர்ந்தனர். அவர் களை வரவேற்ற சனகன் முனிவரை நோக்கி, இவர்கள் யார் என்று வினவ, முனிவர் கூறலானார்: இவர்கள் விருந்தினர்; பேரரசனாகிய தயரதனின் பிள்ளைகள்; நீ புரியும் வேள்வியைக் காண வந்துள்ளனர்; உன்னிடம் இருக்கும் ஒடிக்க முடியாத வில்லையும் ஒரு கை பார்ப் பார்கள்-என்று கூறி, அவர்களின் வரலாற்றை அறிவிக்கலானார். பாடல் : 'இருந்த குலக் குமரர்தமை இருகண்ணும் முகந்து அழகு பருக நோக்கி