பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம்பொழில் 61 கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்' (34) யாராலும் அசைக்கவும் முடியாததும் பலர் கூடித் தூக்கிக் கொண்டு வந்து வைத்ததுமாகிய பெரிய வில்லை இராமன் மிக எளிதில் எடுத்து, திறந்த கண் மூடுவதற்கு முன்பே கணநேரத்தில் நாணேற்றி முறித்து விட்டான் என்பது மிக்க வியப்பே' 'எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்பதில் ஒரு கருத்து இயற்கையாக மறைந்து கிடக்கின்றது. ஆற்றின் ஒரு கரையில் இருப்பவர்கள், எதிர்க் கரையில் யாராவது துணி துவைப்பதைக் கவனிக்கும் போது, முதலில் துணியைக் கல்லில் அடித்தது கண்ணுக்குத் தெரியும்; சிறிது நேரம் கழித்தே, அடித்த ஒலி காதுக்குக் கேட்கும். விண்ணில் முகில்கள் ஒன்றோடொன்று மோதும் போது மின்னல் உண்டாகிறது.-இடியும் உண்டாகிறது. இரண்டும் ஒரே நேரத்தில் உண்டானாலும், ஒலியைவிட ஒளியின் விரைவு மிகுதியாதலின் மின்னல் முதலில் நம் கண்கட்குத் தெரிகிறது. சிறிது நேரம் கழித்த பின்னரே இடி ஒலி நமக்குக் கேட்கிறது. முதலில் காட்சியும் பின்னர்க் கேள்வியும் நிகழும் என்னும் இந்தக் குறிப்பு. எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்' என்பதில் மறைந்து கிடப்பதுபோல் தோன்றுகிறது. கண்மூடிக் கண் திறப்ப தற்குள் எல்லாம் நடந்து விட்டன என்னும் உலகியல் பேச்சு வழக்கு ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. ஆவலைத் தூண்டுதல்: இராமன் வில் ஒடித்த நற்செய்தியைத் தெரிவிக்க நீலமாலை என்னும் தோழி சீதைபால் ஓடினாள்; சீதையை வணங்கினாள், மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடினாள். இதைக் கண்ட சீதை, அவளை நோக்கி, உன் மகிழ்ச்சிக்குக் காரணமான செய்தியை விரைவில் சொல்என்று கேட்டாள். நீலமாலை சொல்லத் தொடங்கினாள்: