பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பால காண்டப் நால்வகைப் படையைக் கடல்போல் மிகுதியாக உடைய வன்; கல்வியில் சிறந்தவன்; தயரதன் எனும் பெயரன், முகில் போல் வழங்கும் கையன். அவனுடைய மகன் மன்மதனினும் அழகுடையவன். கேயரத துரக மாக் கடலன் கல்வியன் தயரதன் எனும் பெயர்த் தனிச்செல் கேமியான் புயல் பொழி தடக்கையான் புதல்வன் பூங்கணை மயல்விளை மதனற்கும் வடிவு மேன்மையான்' (58) இராமன் வில்லை முறித்தான் என மூன்று சொற்களில் செய்தியைச் சொல்லிவிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு சொல்லாமல், நீலமாலை சீதையின் ஆவலைத் தூண்டி மேலும் வளர்த்துகிறாள். மராமரம் போன்ற திண்ணிய தோளினன்;அரவணைத் திருமாலோ என ஐயுறும் ஆற்றலன்: இராமன் என்பது அவன் பெயர். அவன் தம்பியோடும் முனிவரோடும் மிதிலைக்கு வந்தான். "மராமரம் இவைஎன வளர்ந்த தோளினான் அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் இராமன் என்பது பெயர்; இளைய கோவொடும் பராவரு முனியொடும் பதி வந்து எய்தினான்’ (59) ஓர் ஆண்மகன் மற்றோர் இளைஞனுடனும் முனிவர் ஒருவருடனும் ஊருக்குள் வந்தான் என்று சொல்வதன் வாயிலாக, சீதை தெருவில் கண்ட காட்சியை நினைவுறுத்தி மேலும் ஆவலைத் தூண்டுகிறாள். சிவனிடமிருந்து வந்த அந்த வில்லைக் காண வந்தவன், நாண்ே ற்றினான். விண்ணுலகமே அதிர்ந்தது.

பூண் இயல் மொய்ம்பினன் புனிதன் எய்தவில்

காணிய வந்தனன் என்ன, காவலன் ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை நாண் இனிது ஏற்றினான்; நடுங்கிற்று உம்பரே (60)