பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«56 பால காண்டப் வைத்ததும்; பார்க்கப் பொறாமல் அஞ்சித் தம் கைகளால் தம் கண்களைப் பொத்திக் கொண்டனர். அவ்வாறு பொத்தியும், கைகட்குள் கண்கள் அடங்கவில்லை.

பித்த யானை பிணங்கிப் பிடியில் கை வைத்த, மேலிருந்து அஞ்சிய மங்கையர் எய்த்து இடுக்கண் உற்றார், புதைத்தார்க்கு இரு கைத் தலங்களில் கண் அடங் காமையே' (38)

இந்தப் பாடலில் சுவையான குறிப்பு ஒன்றுள்ளது. பெண்களின் கண்கள் காது வரையும் நீண்டிருப்பதாகச் சொல்வது இலக்கிய மரபு. விசாலமான கண்ணுடையவள் என்னும் பொருளுடைய விசாலாட்சி என்னும் பெயர் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. கண்கள் மிகவும் பெரியன வாயிருத்தலின், கைகளால் முழுதும் மறைக்க இயல வில்லை. கண்களின் சில பகுதிகள் வெளியில் தெரிவதால் அப் பகுதிகள், ஆண் யானையினைப் பார்த்து அஞ்சு கின்றன. பெண்களின் கண்கள் பெரியவை என்பதை இவ்வாறு புதிய முறையில் சுவையாகக் கூறியுள்ளார் கம்பர் பெருமான். இரவும் பகலும் இந்தியாவில் ஏறக்குறையப் பகல் பன்னிரண்டு மணி நேரம் சென்றதுமே இரவு வரும்; இரவு பன்னிரண்டு மணி நேரம் கடந்ததுமே பகல் வரும். ஆனால், அயோத்தி மக்கள் மிதிலை சென்ற வழியில் ஒரு கணப் பொழுதில் இரவும் பகலும் மாறிமாறி வந்தனவாம். துணிக்குடைகளும் மயில்பீலிக் குடைகளும் பல் வகை மாலைகளும் மிகுந்த கொடிகளும் எடுத்துச் செல்வதால், இவை வெயிலை மறைத்து இரவு போல் இருள் உண்டாக்கு கின்றன; இவை சிறிது நகர்ந்ததும், உடனே ஒளி பொருந்திய படைக்கலங் களும் முடி மணிகளும் அணிகலன்களும் ஒளி வீசுவதால் இருள் போய், பகல் போன்ற சூழ்நிலை உருவாகிறது எனக்