பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம்பொழில் 67 கம்பர் பகலையும் இருளையும் புதுமைப் படுத்தியுள்ளார். பாடல்: குடையொடு பிச்ச ம்தொங்கல் குழாங்களும் கொடியின் காடும் இடையிடை மயங்கி எங்கும் வெளிகரந்து இருளைச் செய்ய, படைகளும் முடியும் பூணும் படர்வெயில் பரப்பிச் செல்ல, இடையொரு கணத்தினுள்ளே இரவு உண்டு பகலும் உண்டே (55) மற்றொரு ஞாயிறு: ஞாயிற்றின் முன்னே தாமரை மலரும்; ஆனால் இங்கே ஒரு வகைத் தாமரை மலர்கள் குவிகின்றனவாம். தயரத மன்னன் ஞாயிறே போல் வீறுடன் செல்கிறான். அவனைச் சூழ்ந்து செல்லும் சிற்றரசர்களின் கைகளாகிய தாமரை மலர்கள் குவிந்து கும்பிட்டுக்கொண்டுள்ளனவாம். "கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப மற்றொரு கதிரோன் என்ன மணி நெடுங்தேரில் போனான்: (75) விண்ணிலுள்ள ஞாயிறு போல் இன்றி, மண்ணிலுள்ள தசரத ஞாயிறின் முன் சிற்றரசர்களின் கைத் தாமரைகள் குவிவதால், தசரதனை மற்றொரு கதிரோன்’ என்றார். பார் பொறை: வேந்தர்கள் தம் தோளினால் பார் பொறை (பூ பாரம்) தாங்கிக் காப்பதாகக் கூறுதல் மரபு. அதாவது, பாரிலுள்ள மக்களின் துன்பச் சுமையைப் போக்கிக் காப்பாற்றுவார் களாம். ஆனால் இங்கே நிலை ைம வேறுவிதமாக உள்ளது. அதாவது,மிதிலை செல்லும் வழி நெடுகிலும், காலாட்படை, யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகியவை மிகுதியாக நெருங்கியிருப்பதால், அப்படி இப்படி யாரும் நகரவே இடம் இல்லை, இடம் பெயர்த்துச் செல்லவைக்க அருகில் வேறு உலகமும் இல்லை. இந்தப் பெருங்கூட்டத்