பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பால காண்டப் தைத் தாங்க முடியாமல் பார்மகள் (பூமா தேவி) முதுகை நெளிக்கின்றாளாம். நிலைமை இங்ங்னம் இருப்பதால், மன்னன் பார்பொறை (பூபாரம்) நீக்கித் தான் தாங்கினான் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்? விரரும் களிறும் தேரும் புரவியும் மிடைந்த சேனை பேர்விடம் இல்லை மற்றோர் உலகில்லை பெயர்வதாக, நீருடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் பார்பொறை நீக்கினான் என்று உரைத்தது எப்பரிசு மன்னோ!" (80) படையின் மிகுதியை இவ்வாறு புதிய முறையில் படைத்துக் காட்டி இன்புறுத்தியுள்ளார் கம்பர். நிலத்தைச் சுற்றிக் கடல் இருப்பதால், நிலமகள் நீராகிய ஆடையை உடையவள் என்று சொல்வது இலக்கிய மரபு. எனவே, நீருடை ஆடையாள் என்பது நிலமகளைக் (பூமா தேவி யைக்) குறிக்கும். நீர் விளையாட்டுப் படலம் கண் உள்ள தடாகம் : தடாகத்திலே மீன்கள் துள்ளுவதைப் பார்த்த பெண், தடாகங்களுக்கும் கண்கள் உண்டோ என்று கணவனை வினவுகிறாளாம் : உள் நிறை கயலை நோக்கி, ஒடு நீர்த் தடங்கட்கு எல்லாம். கண் உளவாங் கொல் என்று கணவரை வினவுவாரும்' (7) கண்ணுக்குக் கயலை ஒப்புமையாகக் கூறுதல் உண்டு மீனாட்சி, அங்கயற் கண்ணி என்னும் பெயர்கள் எண்ணத். தக்கன. எனவே, தடாகத்தில் உளள கயலைக் கண்ணாக எண்ணியதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. தடாகத்திற்கு நன் கொடை : மாலையணிந்த கூந்தலையுடைய பெண்ணொருத்தி ஒரு தடாகத்தின் கரையில் நின்று அத்தடாகத்தைப் பார்த்