பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பால காண்டப் மனோ வேகம் வாயு வேகமாக ஒடினார் என்று கூறுவதுண்டு. காற்றினும் மனம் மிகவும் விரைவானது. ஒரு நொடியில் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய இடங்கட்கெல்லாம் சென்று வந்துவிடும். அத்தகையை மனம், சீதையிடம் போய்த் திரும்புவதற்குத் தொலைவு ஒரு தடையாய் இருக்க முடியாதே என்ற கருத்து எண்ணுவ தற்குச் சுவையாயுள்ளது. கம்பர் வள்ளுவத்தையும் கற்றிருப்பார். வள்ளுவத்திலும் தலைவி இவ்வாறு கூறுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. என் நெஞ்சமே! அவர் அருளாதிருந்தும் அவர் பின்னே சென்றது உன் பேதைமையாகும்.

  • பரிந்தவர் நல்கா ரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதை என் நெஞ்சு’’ (1248) அவர் நெஞ்சு என்னிடம் வராமல் அவரையே எண்ணிக் கொண்டிருக்கவும், நீ மட்டும் என்னிடம் இல்லாமல் அவரிடம் சென்றது ஏன்?

  • அவர் நெஞ்சு அவர்க் காதல் கண்டும் எவன் நெஞ்சே

நீ எமக்கு ஆகா தது' (1291) என் நெஞ்சே! என்னை விட்டு உன் விருப்பப்படி நீ அவர் பின்னே செல்வது, கெட்டழிந்தவர்க்கு நண்பர்கள் இல்லை என்னும் முதுமொழிப்படியா? கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல்’ (1 293) முன்னோடியான திருவள்ளுவரின் குறட்பாக்கள் ஈண்டு இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் தரப்பட்டுள்ளன. கம்பரின் பாலகாண்டப் பைம்பொழிலில் உள்ள கருத்து வெளியீட்டில் புதுமை’ என்னும் பயன் மரத்தில் இவ்வாறு பல கனிகளைப் பறித்து உண்டு மகிழலாம். அடுத்துப் பைம்பொழிலில் உள்ள சொல் மலர்-மாலை. கள் சிலவற்றை அணிந்து மகிழலாம்.