பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பால காண்டப் இதனால்தான், மொழியாசிரியர்கள் தனித் தனிச் சொற். களைத் தந்து, சொந்தச் சொற்றொடரில் வைத்துப் பயன் படுத்தக் கற்றுத் தருகின்றனர். பொருள் தெளிவாக விளங்காத ஒரு சொல்லை ஒரு தொடரில் வைத்துச் சொல்லின் அகராதியின்றியே பொருள் ஒரளவாயினும் புரியும். இத்தகைய வாக்கியத்திற்குத் தன் பொருளைத் தானே விளக்கும் தொடர்' என்று பெயராம். இந்த அடிப்படையில், கம்பர், தக்க சொல் மலர்களைத் தக்க சொற்றொடர் மாலைகளில் வைத்து ஆண்டிருக்கும் கலையழகைச் சிறிது காண்பாம். ஆற்றுப் படலம் மேய்தல் வெண்ணிறு அணிந்த சிவன்போல் வெளுத்திருந்த மேகம், கடல் நீரை உட்கொண்டு திருமால்போல் கருநிறம் கொண்டதாம். மேகம் கடல் நீரை உட்கொண்டதை, 'ஆர்கலி மேய்ந்து' என்று குறிப்பிட்டுள்ளார் கம்பர். ஆர்கலி=கடல். ஆடு மாடு முதலிய அஃறிணை உயிரிகள் தீனி உட்கொள்வதற்கு மேய்தல்' என்னும் பெயர் வழங்குதல் மரபு. நிரம்ப நீரை உட்கொண்டது என்பதைக் குறிக்க ஆர்கலி மேய்ந்து' என்று கூறியிருக்கும். சொல்லாட்சி ஒரு வகைச் சுவை பயக்கிறது.

  • நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து...” (2) என்பது பாடல் பகுதி சேத்தல் சரயு ஆற்றுவெள்ளம் பால், தயிர், வெண்ணெய், சேந்தநெய் ஆகியவற்றை உறியோடு அடித்துச் சென்றதாம்.