பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 75 செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் உறியொடு வாரி உண்டு...' (15) என்பது பாடல் பகுதி: வெண்ணெய் அதன் பெயரிலிருந்தே வெள்ளையாய் இருக்கும் என்பது தெரியும். வெண்ணெயைக் காய்ச்சினால் சிவந்த நெய் உருவாகும். வெண்ணெயைச் சிவக்கக் காய்ச்சி நெய்யாக்குவார்கள். இதைத்தான் சேந்த நெய் என்று கம்பர் குறிப்பிட்டுள்ளார். சேந்த நெய் = சிவந்த நெய். சேத்தல் = சிவத்தல். நெய் சேத்தலைக் கம்பர் கூர்ந்து கவனித்து நினைவில் கொண்டு எழுதி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. கம்பரின் சேந்த என்னும் சொல்லாட்சி, ஒரு புணர்ச்சி விதியின் திருத்தத்திற்குத் துணை புரிகிறது. சேயரி என்றால் சிவந்த (இரேகை) கோடு என்பது பொருளாம். இதற்குப் புணர்ச்சி விதி கூறுபவர்கள், செம்மை+ அரி என்பதுதான் சேயரி என்றாயிற்று என்று நன்னூல் விதியை ஒட்டிக் கூறுவர். நன்னூல் நூற்பா ஒன்றில் சொல்லப்பட்டுள்ள ஈறுபோதல்’ என்றவிதிப்படி, செம்மை என்பதன் ஈற்றிலுள்ள ம்மை என்னும் எழுத்துக்கள் மறைந் தனவாம். ஆதிநீடல்' என்றபடி, முதல் எழுத்தாகிய செ' என்பது சே' என நீண்டதாம். இவ்வாறாக,செம்மை என்பது 'சே' என்றாயிற்றாம். சேய் அரி என இடையிலுள்ள ய்’ என்பதை உடம்படு மெய் எனலாம். அல்லது முன்னின்ற மெய் திரிதல்' என்றபடி, ம்’ என்பது ய் எனத் திரிந்ததாகவும் கூறுவர். இது தவறான புணர்ச்சி விதி.செம்மை அரி என்பதைப் பலமுறை செம்மை அரி-செம்மை அரி என்று சொல்லிப் பார்க்கினும் சேயரி என்ற முடிவு கிடைக்காது. எனவே, சே+ அரி என்பதே சேயரி ஆயிற்று எனலே பொருந்தும். 'சே' என்னும் ஒரெழுத்துச் சொல்லே சிவப்பு-சிவத்தல்

  • நன்னூல்- எழுத்து-பதவியல் - 9