பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பால காண்டப் "ஆம்பல் குப்பை' கல்லாடம்-கல்லாடர் "உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை' (நற்றிணை, 138-1) "பளிக்காய்க் குப்பையும் பலம்பெய் பேழையும்’ (பெருங்கதை, 2-2-12-பளிக்காய்= பாக்கு) 'யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்' (சிலப்பதிகாரம், 25-37) 'சந்தின் குப்பையும் தாழநீர் முத்தும்' (சிலப்பதிகாரம்,26-168 -சந்து = சந்தனம்) "மரக்களி யன்ன திருத்தகு பொன்னும் இரத்தினக் குப்பையும் இலங்கொளிப் பவழமும்' (பெருங்கதை ,2-14-68, 69) கோடுபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை' விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பை' (மணிமேகலை, 16-122, 123) இவற்றால் குப்பையின் உட்பொருளை உணரலாம். எனவேதான், கறிக் குப்பை என்றார் கம்பர். நகரப்படலம் நானா விதம் : முகில்கள் வான வீதியில் பலவிதமாக ஓடுகின்றனவாம். பல விதம் என்பதற்கு 'நானா விதம்' என்னும் வழக்குச் சொல்லைக் கம்பர் கையாண்டுள்ளார்.

  • நானா விதமா நாளி மாதிர வீதி ஒடி' (69). என்பது பாடல் பகுதி.