பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பால காண்டப் இந்தப் பாடலின் கருத்து வெளியீட்டு அமைப்பு புதுமை யாகவும் இருக்கிறது. கம்பரது பாடல் அல்லவா? இயம் மொழிதல் கலைக் கோட்டு முனிவன் அயோத்திக்கு வந்த போது பல இயங்கள் (வாத்தியங்கள்) இசைக்கப் பட்டன; முரசம் அடிக்கப்பட்டது, தீவினை அழியலாயிற்று மொழிந்தன பல் இயம், முரசம் ஆர்த்தன, விழுந்தன தீவினை வேரி னோடுமே” (67) 'பல் இயம் மொழிந்தன எனக் கம்பர் கூறியுள்ளார். இதில் உள்ள நயமாவது;-மொழிதல் என்றால் பேசுதல் இது வாய்-நாக்கு முதலிய ஒலி உறுப்புகளின் வேலை. ஆனால், இயம் மொழிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, வாயால் பேசிக் கருத்து அறிவிப்பது போலவே இயங்கள் முழங்கின-என இதற்குக் கருத்து கொள்ளல் வேண்டும். இயங்கள் இசைத்ததை அப்படியே பேசுவது போல் இருந்தது என்று உலகியலில் மக்கள் கூறுவதுண்டு. நீடா மங்கலம் மீனாட்சி சுந்தரம் தவில் (மேளம்) அடித்தால் அப்படியே பேசுவது போல் இருக்கும் என்று ஒருவர் கூறியதை யான் கேட்டிருக்கிறேன். இங்கே பிரபுலிங்க லீலை என்னும் நூலில் உள்ள ஒரு கருத்து நினைவிற்கு வருகிறது: மாயை என்பவள் நடனம் ஆடியபோது மத்தளம் அடிக்கப்பட்டது. இதைச் சிவப்பிரகாசர் சுவையாகப் பாடி யுள்ளார். மத்தளம், வாய் சொல்லும் மொழி போலக் கைகளின் மூலம் வார்த்தை (மொழி பேசிற்றாம். 'வாயுரைக்கும் மொழிபோலத் தண்ணுமை செங் கைகளால் வார்த்தை சொல்ல - (மாயை பூசை கதி-50) என்பது பாடல் பகுதி. இந்தச் சுவை, மொழிந்தன பல் இயம்' என்னும் கம்பர் பாடலாலும் நுகரப்படுகிறது.