பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:82 பால காண்டப் 'வில்ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல்ஏர் உழவர் பகை' (872) என்னும் குறளும் ஈண்டு எண்ணத் தக்கன. தடுப்பரும் சாபம் வல்ல முனிவர் என்பதோடு கம்பர் நிறுத்தவில்லை; 'வரம் தரு முனிவன் என்றும் கூறியுள்ளார். ஏன் எனில்,தன் மனைவி அகலிகையைக் கெடுத்த இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறிகள் உண்டாகுக என்று சாபமிட்டார். அப்படியே நடந்தது. பின் வேண்டுதலின் பேரில், ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகுக எனச் சாப விலக்கு செய்தார். அகலிகையைக் கல்லாக ஆகுக எனச் சபித்தார். பின் வேண்டுதலின் பேரில், கல்லைத் தசரத இராமன் மிதித்ததும் மீண்டும் பெண்ணாவாய் என்று சாப விலக்கு செய்தார். எனவேதான், தடுப்பரும் சாபம் வல்ல வரம் தரு முனிவன்’ என்று கம்பர் பாடியுள்ளார். இந்தச் சொல் - தொடர் அமைப்பு மிகவும் சுவை பயக்கிறது. கல் இயல்: கெளதமர் அகலிகையை நோக்கி, விலைமகள் அனைய நீயும் கல் இயல் ஆதி. (22) என்று வைவு (சாபம்) இட்டாராம். கல்உரு ஆதி என்றோ கல்வடி வாதி என்றோ கூறாமல் கல் இயல்? ஆதி என்று கூறியதில், ஏதேனும் ஆழ்ந்த கருத்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மக்கள் எடுக்கும் பல பிறவிகளுள் கல்லையும் மாணிக்க வாசகர் சேர்த்துள்ளார். இது திருவாசகம் பாயிரப் (சிவபுராணம்) பகுதியில், "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்