பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைம் பொழில் 83 செல்லா கின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்' (26–31) எனக் கூறப்பட்டுள்ளது. கல்லுக்கும் உயிர் உண்டு எனத் தேல்சு (Tales) என்னும் அறிஞர் கூறியுள்ளார். இக்கருத்து களோடு கல் இயல்' என்பதை ஒத்திட்டு ஆய்வு செய்ய வேண்டும். மிதிலைக் காட்சிப் படலம் சொற்கலை முனிவன்: அகத்தியர் சொற்கலை (சொல் கலை) முனிவன்? எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். சொல் கலை என்றால் மொழிக்கலை. மொழிக்கலை என்பது இலக்கணம். இலக்கணம் என்னும் சொல் இலட்சணம் என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு என்று சொல்பவர்கள் உண்டு. கம்பர் இலக்கணத்திற்குச் சொல் கலை என அழகான பெயர் தந்துள்ளார். இப்போது மொழியியல்' என்னும் பெயர் நடமாடுகிறது. Linguistics என்னும் ஆங்கிலச் சொல்லின் பெயர்ப்பாகவும் மொழியியல்: என்னும் சொல் வழங்கப் படுகிறது. அகத்தியம் என்னும் சொல் கலை (இலக்கண) நூல் எழுதியதால், அகத்தியர் சொற்கலை முனிவர் எனப்பட்டார். சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும்'(5) என்பது கம்பரின் பாடல் பகுதி. பொலம் பொலம்குழை மயிலைக் கொண்டு அரிதின் போயினார்' (45) என்று கம்பர் சீதையைப் பொலம் குழை மயில் எனக் குறிப்பிட்டுள்ளார். மயில் என்பது, மயில் போன்றவள் என உவமை யாகு பெயராய்ச் சீதையைக் குறிக்கின்றது. சிதை பொலம் குழை அணிந்துள்ளாளாம். பொலம் குழை