பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 85 தொள்ளாயிரம் எனவும் ஆனதாகத் தொல்காப்பியர் தவறாகக் கூறியிருப்பது போலவே, பொன் + குழை என்பது பொலம் குழை என்றாகும் எனக் கூறியிருப்பதும் தவறே யாகும். எனவே, கம்பர் கூறியுள்ள பொலம்’ என்னும் சொல்லைப் பொன்’ என்பதின் திரிபாகக் கொள்ளாமல், பொன் என்னும் பொருள் உடைய ஒரு தனிச்சொல் லாகவே கொள்ள வேண்டும். தொல்காப்பியர் காலத்தில், 'பொன்’ என்னும் பொருளில் பொலம்’ என்னும் சொல். ஆட்சியில் அரிதாய் இருந்தது போலும். அறிஞர்கள் இதனை ஆய்க. எழுச்சிப் படலம் புல மகன் புலம் = புலமை=அறிவு.புல மகன்=புலவன் = அறிஞன். இந்தச் சொல்லாட்சியைக் கம்பர், வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான்' (3) என்னும் பகுதியில் கையாண்டுள்ளார். பயப் பய மெல்ல (மெதுவாக) என்னும் பொருளில் பைய’ என்னும் சொல் சில வட்டாரங்களில் வழங்கப்படும். * பையவே சென்று பாண்டியற்காகவே' என்பது ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்பகுதி (திருவாலவாய்ட் 5–1) - அசை இயற் குண்டாண்டோர் எளர் யான் நோக்கப் பசையினள் பைய நகும்' (1098) என்பது திருக்குறள், இவ்வாறு பாடல்களிலும் இடம் பெற்றுள்ள பைய என்பது மருவி, பயப்பய (பைய-பைய) எனக் கம்பரால் அடுக்குத் தொடராகத் தரப்பட்டுள்ளது. பா-6