பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பால காண்டப் 'ஆடலகத்து ஒடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் பாடகக் காலினாரைப் பயப் பயக் கொண்டு போனார் (52) என்பது கம்பரின் பாடல் பகுதி. யானைகளின் மத நீரால் வழுக்குகின்ற தரையில் பெண்களை மெல்ல-மெல்ல அழைத்துச் சென்றனராம். வரைக் காட்சிப் படலம் உடுபதி உடுபதி = திங்கள் (சந்திரன்). உடு=விண்மீன்கள். அசுவினி முதல் இரேவதிவரை சொல்லப்படுகின்ற இருபத்தேழு விண்மீன்கட்கும் உரிய கணவன் (பதி) திங்கள் என்பது புராணக் கதை மரபு. ஒப்புறத் துளங்கு கின்ற உடுபதி ஆடி' (5) எனக் கம்பர் திங்களை உடுபதி எனக் குறிப்பிட்டுள்ளார். மலை மீது இருந்த பெண்கள் திங்களாகிய கண்ணாடியில் முகம் ப ர் த் து க் கொண்டனராம். பூக் கொய் படலம் மறலிக்கு ஊண் அயோத்தியிலிருந்து திருமணங் காண மிதிலைக்குச் செல்பவன் ஒருவன், எமனுக்கு உணவு தேடித் தரும் வேலை உடையவன் எனக் கூறப்பட்டுள்ளான்: மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான்' (27) என்பது பாடல் பகுதி. அவனது மற வலிமையைக் கம்பர் இந்தத் தொடரால் சுவைபெறப் புனைந்துள்ளார்.