பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சிறப்புறு செய்திக் கனிகள் கம்பர் பெருமானின் பாலகாண்டப் பைம்பொழிலில் உள்ள சிறப்புறு செய்திகள்' என்னும் செழு மரத்தில் உள்ள சில கனிகளைச் சுவைத்துப் பார்க்கலாம். ஆற்றுப் படலம் நால் நில மயக்கம்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு திணைகளுள் (நிலங்களுள்) ஒரு திணைக்கு உரிய பொருள் மற்றொரு திணையில் இருப்பதாகக் கூறினால், அந்த நிலையைத் திணை மயக்கம் என்பர். கோசல நாட்டில் உள்ள சரயு ஆறு இந்தத் திணை மயக்கத்தைச் செய்கிறது. முல்லை நிலத்துப் பொருள்களை குறிஞ்சிக்கும், மருதப் பொருளை முல்லைக்கும், நெய்தல் பொருளை மருதத்திற்கும் ஆற்று வெள்ளம் கொண்டு போய்ச் சேர்த்துத் திணைகளை மாற்றுகிறது. மக்கள் செய்த வினை அவர் எப்பிறவி எடுப்பினும் தொடர்ந்து செல்வது போல், எவ்வகை நிலத்திலும் ஆற்று நீர் சென்று கொண் டிருந்தது. இது நாட்டின் நீர் வளத்தை அறிவுறுத்துகின்றது. {ᏞᎫfᎢ Ꮮ6Ꮈ) :

  • முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை

ஆக்கி, புல்லிய நெய்தல் தன்னைப் பொருவரு மருதம் ஆக்கி,