பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பால காண்டம் கம்பெனியார்' என்னும் நாடக நிறுவனத்தார் நடத்திய ஒரு நாடகத்தில், வெள்ளைத் துணிகளை ஏற்றியும் இறக்கியும் அலை அடிப்பதுபோல் காட்டிய காட்சியைக் கண்டு வியப்புற்றேன். நாடகத்தில் துணி அலையாகிறது; கம்பரது பாடலில், அலை துணியாகச் சொல்லப் பட்டுள்ளது. இனிய இசைக்கு இங்கே தேன் பிழி மகரயாழ் ஒப்புமையாக்கப்பட்டுள்ளது. யாழ் தமிழர்களின் இசைக் கருவி. யாழில் பலவகை உண்டு. பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டியாழ் என்னும் ஒரு வகை நான்கனுள் மகரயாழும் ஒன்றாகும். இது மகர (மீன்) வடிவமானது; பத்தொன்பது நரம்புகளைக் கொண்டது. "குழலினிது யாழினிது’ என்னும் குறள் பகுதி (66) யாழின் இனிமையை அறிவிக்கிறது. யாழுக்கும் இசைக்கும் நெருக்கம் மிகுதி. பண்டு, யாழ்க் கருவியை நிலைக்களமாகக் கொண்டே பெரும் பண்களும் அவற்றின் திறங்களும் நுண்ணிதின் ஆராய்ந்து வகைப்படுத்தப் பட்டன. யாழ் நரம்பின் துணை கொண்டு ஆராய்ந்து கண்ட பண்வகைகள் யாழின் பகுதி எனப் படும். அப்பண்களின் இயல்பினை விளக்கும் இசை நூலை நேரம்பின் மறை” என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். யாழ்களுள் மகரயாழ் பற்றிக் கம்பர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். மணிமேகலையில், "தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகரயாழின் வான்கோடு தழீஇ (4–55,56). எனவும், மேரு மந்திர புராணத்தில், "மகர யாழ்வல்ல மைந்தன் ஒருவனைக் கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்... (வச்சிராயுதம்- 1) எனவும், சிலப்பதிகாரத்தில், யாழிடைப் பிறவா இசையே என் கோ' (2-79) எனவும், பாரதி தாசனது பாடலில்,