பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 93 'செவி உணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் கிலத்து' (413) என்னும் குறளும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது: இறுதியில் உள்ள விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்' என்னும் அடியில் உள்ள 'கண்டன்ன என்பதைக் கண்டு அன்ன? எனப் பிரித்து, விருந்தினரைக் கண்டு அன்னம் (சோறு) படைக்கும் சிறப்பு நிகழ்ச்சி என்பதாகச் சிலர் கருத்துக் கூறியுள்ள னர். இவ்வாறு பொருள் கொள்வதில் சிறப்பு இல்லை. இதன் உண்மைக் கருத்தாவது :-சிலர் சில விழாக்களை நடத்தி மகிழ்கின்றனர். அவர்களுடைய மகிழ்ச்சி எத் தகையது எனில், விருந்தினரைக் கண்டதும் உண்டாகின்ற மகிழ்ச்சி போன்றது-என்பதாகும். கண்டன்ன விழா என்பதைக் கண்டு அன்னம் விழா' எனப் பிரிக்கலாகாது. கண்டன்ன என்பது கண்டாற் போன்ற என்றும் பொருளது. விருந்தினரைக் கண்டால் நல்லோர்க்கு முகம் மலரும் என்னும் கருத்தை, வள்ளுவர் 'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து கல்விருங் தோம்புவான் இல்' (84) என்னும்குறளில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கண்டன்ன? என்பதற்குக் 'கண்டது போன்ற என்ற பொருள் கொள்ளலே சாலப் பொருந்தும். முதுகுக்கு ஒய்வு நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த இடமும் ஆகும். வெளியிலிருந்து வந்த கப்பலில் உள்ள பொன் முதலிய பொருள்களை எல்லாம் இறக்கிவிட்டுச் சுமந்து வந்த கப்பலின் முதுகுக்கு நெய்தல் நிலம் ஒய்வு கொடுக்குமாம்.